டாக்டர் மு.வரதராசனார் (1912 – 1974)
மு.வ எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட மு. வரதராசன் ( ஏப்ரல் 25 , 1912 - அக்டோபர் 10 , 1974 ) 20ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர். இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் போன்றவை மட்டுமன்றிப் பல சிறுகதைகள் , புதினங்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார். இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரி , சென்னை பல்கலைக் கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைமைப் பொறுப்பில் இருந்ததுடன், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றினார். பன்முக ஆற்றல்கள் கொண்ட இவர் நல்லாசிரியராகவும், பண்பாளராகவும் விளங்கினார். எழுத்துப் பணி [ தொகு ] நாவல்கள், சிறுகதைகள், சிறுவர் இலக்கியம், நாடகங்கள், இலக்கணம், கட்டுரைகள், தமிழ் இலக்கிய நூல்கள், பயணக் கட்டுரை, முன்னுரைகள், மொழிபெயர்ப்பு, மேற்கோள்கள் என 91 நூல்களை தமிழுக்குத் தந்துள்ளார். கால அடிப்படையில் பொருள் அடிப்படையில் 1939 1 குழந்தைப் பாடல்கள் 2 இளைஞருக்கான இரு சிறுகதைகள் 3 சிறுவர்க்கான சேக்சுபியர் கதைகள் – 1 4 கழகத் தமிழ் இலக்கணம் 1 5 கழக...
Comments
Post a Comment